தைப்பூசம் மட்டுமில்லாமல் தைப்பூசத்துக்கு முந்தைய நாளும் விடுமுறை!: தமிழக அரசு

தமிழகத்தில் இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து விடுமுறை நாட்களாக காணப்படுகிறது. பெருவாரியான கல்லூரிகள் பள்ளிகளில் போகிப்பண்டிகை அன்று முதல் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதன்படி வருகின்ற வியாழக்கிழமை முதல் பெருவாரியான நிறுவனங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில இடங்களில் பொங்கல் தினத்தன்று தான் விடுமுறை தொடங்குகிறது. இந்த சூழ்நிலையில் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என வரிசையாக வெள்ளி, சனி.. ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் திங்கட்கிழமையும் விடுமுறை  அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 17-ஆம் தேதி திங்கட்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஏனென்றால் தமிழகத்தில் வருகின்ற 18ம் தேதி தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் 17ஆம் தேதியும் கூடவே சேர்த்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 29ஆம் தேதி பணி நாளாக அறிவித்தது தமிழக அரசு.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment