பள்ளிகளுக்கு விடுமுறை : அமைச்சர் தகவல்

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் இணையவழி மூலமாக கல்வி கற்று வந்தனர்.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்த பிறகு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று பயின்று வந்தனர்.

தற்பொழுது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தேர்வானது நாளையுடன் முடிவடைவதால் 25.12.2021 இல் இருந்து 02.01.2022 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுவதாக பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment