Connect with us

சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை! மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்!!

school closed2

செய்திகள்

சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை! மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்!!

சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை! மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்!!

2022ம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் கட்டுப்படுத்த பட்ட கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு விட்டது. மட்டுமில்லாமல் ஒமைக்ரான் பாதிப்பும் நம் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கி விட்டது. இதன் விளைவாக ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தி கொண்டு வருகிறது.

அந்த வரிசையில் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழுநேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது. மாணவர்களுக்கும் பள்ளிகள் கல்லூரிகள் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் எக்ஸாம்கள்தான் நடைபெறும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். பள்ளிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசை போன்று ஒவ்வொரு மாநில அரசும் ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. அந்த வரிசையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள உத்தரகாண்டில் ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஏனென்றால் கொரோனா  பரவல்களை கட்டுப்படுத்த உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் உத்தரகாண்ட் அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top