Connect with us

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!

156689 school holiday

தமிழகம்

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இந்நிலையில் வருகின்ற 12-ம் தேதி இடைத் தேர்தலின் வாக்கு பதிவானது நடைப்பெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் படி, தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், இதர நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், அரசு உள்ளாட்சி அமைப்புகள் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் அனைத்து கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடி மையங்களில் சனிக்கிழமை ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய அறிவிப்பால்  ஊழியர்கள்  மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top