ஜன.11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகின்ற 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்குரு தியாகராஜரின் 176-வது முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை வரும் 11ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

இனி மழைக்கு வாய்ப்பு இருக்கா?- வானிமை மையம் புதிய தகவல்!

இந்நிலையில் தொடர்ந்து 6 நாட்களாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இன்று மாலை தமிழிசை செளந்தரராஜன் முன்னிலைன் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியானது துவங்க இருக்கிறது. அதே போல் பல்வேறு இசை கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக வருகின்ற 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு, அன்றைய தினத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தூரில் சோகம்! ஜிம்மில் மாரடைப்பு.. ஹோட்டல் உரிமையாளர் மரணம்!

இந்த நாளை ஈடுக்கட்டும் வகையில் வருகின்ற 21ஆம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.