விடிய விடிய பெய்த கனமழை; நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தற்போது நம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் காலம் நடைபெறுகிறது. பொதுவாக தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழையின் போது தான் அதிக கன மழை கிடைக்கும்.  தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் ஓரளவிற்கு நிரம்பும்.

ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்து கொண்டு வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் விடாமல் கன மழை பெய்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர். கனமழை காரணமாக இன்று நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment