26ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! மீண்டும் ஒர்க் பிரம் ஹோம்!!

நம்  இந்தியாவின் தலைநகரமாக காணப்படுகிறது டெல்லி. டெல்லியில் கடந்த சில நாட்களாக பெரும் காற்று மாசுபாடு நிலவுகிறது. ஏற்கனவே  சில ஆண்டுகளுக்கு முன்பு காற்று மாசுபாடு  அதிகமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

delhi air

இருப்பினும் தீபாவளிக்குப் பின்னர் மீண்டும் எதிர்பாராதவிதமாக டெல்லியில் காற்று மாசுபாடு மிக வேகமாக பரவியது. இதனால் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் நவம்பர் 26-ஆம் தேதி வரை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்துள்ளது ஆம் ஆத்மி அரசு. அதன்படி டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையில் நீடித்து வருவதால் பள்ளிகள் 26ஆம் தேதி வரை இயங்காது என்றும் டெல்லி அரசு கூறியுள்ளது.

அதோடு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் நவம்பர் 26ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் டெல்லி மாநகர நவம்பர் 26ம் தேதி வரை தடை விதித்துள்ளது டெல்லி மாநில அரசு.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment