Connect with us

எவ்வளவு நாளாச்சு இந்த மாதிரி லீவு விட்டு! கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

பள்ளிகள் விடுமுறை

Tamil Nadu

எவ்வளவு நாளாச்சு இந்த மாதிரி லீவு விட்டு! கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

எவ்வளவு நாளாச்சு இந்த மாதிரி லீவு விட்டு! கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கொண்டுவந்தது. அதிலும் குறிப்பாக நவம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஏனென்றால் நவம்பர் மாதத்தில் அதிதீவிர கனமழை பெய்தது. அதன்பின்னர் மெல்ல மெல்ல மழையும் குறைந்தது. இந்த நிலையில் நேற்று எதிர்பாராத விதமாக தமிழகத்தில் கனமழை பெய்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நாசம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பல மாதங்களுக்குப் பின்பு இன்றைய தினம் மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்தார் அம்மாவட்ட ஆட்சியர்.

அதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பினை அளித்தார் மாவட்ட ஆட்சியர். அதன்படி கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடரும் கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறுவதால் அவர்கள் மட்டும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top