அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை! முதல்வர் அறிவித்த ஜோரான செய்தி;

இந்தியாவில் எதிர்பாராதவிதமாக கடந்த மாதம் இறுதி முதல் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்றையதினம் இந்தியாவில் 2 1/2 லட்சத்தை நெருங்கி கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது.

இந்த சூழலில் தமிழகத்திலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் இரவு நேர ஊரடங்கும் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளன.

இந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற தொடங்கிவிட்டது. அதன் வரிசையில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவ்ராஜ்

அதன்படி மத்திய பிரதேசத்தில் நாளை முதல் பள்ளிகள் மூடப்படும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நாளை முதல் இந்த மாதம் இறுதியான ஜனவரி 31-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் கூறியுள்ளார்.

கொரோனா அதிகரித்து வரும் நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment