Connect with us

நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

holiday

தமிழகம்

நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தை பொறுத்தவரையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் கூறியுள்ளார்.

அதன் படி கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுக்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் கூறியுள்ளார். இத்தகைய அறிவிப்பினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதோடு இன்றைய தினத்தில் . நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top