திருச்சியில் ஜன.2-ம் தேதி விடுமுறை அறிவிப்பு!!

திருச்சியில் ஜனவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி திருக்கோயிலின் வைகுண்ட ஏகாதசி திருவிழா துவங்க உள்ளது. இதன் காரணமாக ராப்பத்து, பகல் பத்து என மொத்தமாக 20 நாட்கள் இவ்விழா நடைப்பெறுவது வழக்கம்.

பொங்கல் பரிசு ரூ.5000 – அதிமுக முன்னாள் அமைச்சர் கோரிக்கை!!

இந்நிலையில் விழாவின் முக்கிய தினமாக கருதப்படும் வைகுண்ட சொர்க்கவாசல் திறப்பு, பரமபத வாசல் திறப்பு ஜனவரி 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைப்பெற்று வருகிறது.

இதனால் மக்களின் நலன் கருதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அன்றைய தினத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பக்தர்கள் வேன் விபத்து: ஐகோர்ட் புதிய உத்தரவு!!

மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 7ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து, அன்றைய தினத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.