வைகாசி, ஆனி மாதங்கல் தொடங்கினாலே அனைத்து மாவட்டங்களிலும் திருவிழாக்கள் தொடங்கியது என்று கூறலாம். அந்தவகையில் வருகின்ற 11ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனித் தேரோட்டம் நடைப்பெற உள்ளது.
இதனால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதே போல் அன்றைய தினத்தில் அரசு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளார். அதோடு வங்கிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது என கூறியுள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற 23-ம் தேதி வேலைநாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறியுள்ளார்.
மேலும், திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெறுவதால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் வசதிக்கு ஏற்ப இந்த விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.