31 ஆம் தேதி வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை! மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுமா?
தமிழகத்தில் கொரோனா பரவால் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இன்றைய தினம் தமிழகத்தில் முழு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறைகளும் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு இந்த மாதம் 20ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு முறையை ரத்து செய்து மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.
ஆனால் 10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு காரணம் என்பதால் நேரடி வகுப்பு முறையை தமிழக அரசு நடைமுறையில் வைத்திருந்தது. இதற்கு நீதிமன்றம் ஆன்லைன் மூலம் அவர்களுக்கு வகுப்புகள் நடத்தலாம் என்று அறிவுறுத்தியிருந்தது.
அதன் விளைவாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 19ஆம் தேதி முதல் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
