Connect with us

அனைத்து போலீசாருக்கும் விடுமுறை ரத்து-மராட்டிய அரசு உத்தரவு

960143 maharashtra police new

News

அனைத்து போலீசாருக்கும் விடுமுறை ரத்து-மராட்டிய அரசு உத்தரவு

அனைத்து போலீசாருக்கும் விடுமுறை ரத்து-மராட்டிய அரசு உத்தரவு

உலகம் முழுவதும் நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். நாளை (டிசம்பர் 31) ஆண்டின் கடைசி நாள் என்பதாலும் நாளை மறுநாள் (ஜனவரி 1) புத்தாண்டு பிறக்க உள்ள சூழ்நிலையிலும் பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மும்பை முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மும்பை போலீசார் அனைவருக்கும் நாளை விடுமுறை தினம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து போலீசாரும் நாளை பணிக்கு வர உத்தரவிட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக மும்பை ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை, தாதர், பாந்த்ரா, சர்ஜ்கேட் உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top