#breaking….நாளைய தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!!
நம் தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் இன்று வரை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் வியாழக்கிழமை நம் தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
அதனை அடுத்த வெள்ளிக்கிழமை புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் வியாழன் முதல் ஞாயிறு வரை தொடர்ந்து நான்கு நாட்கள் பள்ளிகள், கல்லூரிகள் அலுவலகங்கள் என அனைத்தும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளைய தினம் அனைத்து அலுவலகங்களும், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. இவ்வாறு உள்ள நிலையில் நாளை தினமும் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது மாணவர்களுக்கு பெருத்து சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
அதன்படி அரியலூர் மாவட்டத்தில் நாளைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா நாளை ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
