Connect with us

நாளையாவது ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துங்கள்!: ஈபிஎஸ் பேட்டி

ஈபிஎஸ்

தமிழகம்

நாளையாவது ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துங்கள்!: ஈபிஎஸ் பேட்டி

நாளையாவது ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துங்கள்!: ஈபிஎஸ் பேட்டி

நாளைய தினம் நம் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் விரைவாக வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் இன்றைய தினமே ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நேற்றைய தினத்தோடு இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு பெற்றது.

இவ்வாறு உள்ள நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் ஜனநாயக முறைப்படி நாளைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கோயம்புத்தூரில் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக வினர் கைது எதிர்க்கட்சிகள் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அந்த பரப்புரையில் காரசாரமாக பேசியும், ஆளுங்கட்சியை விமர்சனம் செய்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top