ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்க்க உரிமையில்லை!-கர்நாடகாவிற்கு கண்டனம்;
2 நாட்கள் முன்பு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இருந்தார். அவற்றில் ஒன்றுதான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கர்நாடகத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதன்படி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2.0 எதிர்க்க கர்நாடகத்துக்கு உரிமை இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கூறியதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதை கூட கர்நாடக அரசு எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் எந்த முட்டுக்கட்டை போடாமல் விலகி இருக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.
