இல்லம் தேடி கல்வித்திட்டம் அனைத்துக்கும் மாநில நிதி மட்டும் தான்! அமைச்சர் அன்பில் மகேஷ்;

நேற்றைய தினம் தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் முதல்வர் முக ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் முதல்வர் முக ஸ்டாலின்.  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.இல்லம் தேடி கல்வி

இந்த நிலையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தைப் பற்றி விளக்கம் அளிக்கிறார். அதன்படி இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அவர் தொடர்ச்சியாக விளக்கம் அளித்து வருகிறார்.

முதற்கட்டமாக இது முற்றிலும் மாநில அரசு நிதியில் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். எச்சரிக்கை உணர்வுடன் தான் திட்டத்துக்கான தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

தன்னார்வலர்கள் தேர்வில் பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். சில கட்சித் தலைவர்கள் கூறிய எச்சரிக்கை உணர்வுடன் தான் இந்த திட்டத்தை அரசு செயல்படுகிறது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

முதல் கட்டமாக இவை தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் கூறினார். இடைநிற்றலை குறைப்பதற்கான வழி வகையாக இல்லம் தேடி கல்வித் திட்டம் அமையும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment