வரலாற்றில் இன்று: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து 5 ஆண்டுகள் நிறைவு!!

நம்  இந்தியாவில் தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெறுகிறது. இதனால் மத்திய அரசாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது.இந்தியாவில் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். இந்நிலையில் நரேந்திர மோடி தான் பிரதமராக ஆட்சிக்கு வந்த சில வருடங்களில் அதிர்ச்சிகரமான சம்பவத்தை அறிவித்திருந்தார்.

500-1000500-1000

அதன்படி இந்தியாவில் இனி 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியிருந்தார். இதனால் பெரும் பணமதிப்பிழப்பு இந்தியாவில் ஏற்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் கருப்புபணம் குறைக்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருந்தார் மோடி .

இதனால் பல இடங்களில் கொத்துக்கொத்தாக இந்த 500,1000 ரூபாய் நோட்டுகள் சாலைகளில் வீசி எறியப்பட்டன. வங்கிகள், ஏடிஎம்கள், பெட்ரோல் நிலையங்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் வரிசையாக நின்று கொண்டே இருந்தது.

இதோடு மட்டுமில்லாமல் பலரின் வாழ்வாதாரமும் கணிசமாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்து இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவை இந்திய வரலாற்றில் மிகவும் மறக்க முடியாத நாளாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment