Connect with us

வரலாற்றில் இன்று: முதல் முறையாக டெல்லியில் பறந்த திமுக கொடி!

anna kalaignar arivalayam

News

வரலாற்றில் இன்று: முதல் முறையாக டெல்லியில் பறந்த திமுக கொடி!

வரலாற்றில் இன்று: முதல் முறையாக டெல்லியில் பறந்த திமுக கொடி!

இன்றைய தினம் நம் தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுகவிற்கு வரலாற்று சிறப்புமிக்க தினமாக காணப்படுகிறது. ஏனென்றால் திமுக அலுவலகம் டெல்லியில் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், துரைமுருகன், சோனியாகாந்தி, டி.ஆர். பாலு உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தில் கட்சி கொடியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதனால் டெல்லியில் திமுக கொடி பறக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லி திமுக அலுவலகத்தில் குத்துவிளக்கை ஏற்றி வைத்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி. டெல்லி திமுக அலுவலகத்தில் அண்ணா சாலையை அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார். டெல்லி அறிவாலயத்தில் அண்ணா சிலையை துரைமுருகன் திறந்து வைத்தார். கலைஞர் சிலையை டி ஆர் பாலு திறந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top