விநாயகர் சதுர்த்தியின் வரலாறு!

விநாயகர் சதுர்த்தி விநாயகரின் பிறந்தநாளாக கொண்டாடப் படுகிறது.

விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். ஒரு பிடி மஞ்சள் போதும் உடனே தரிசனம் தந்திடுவார். விநாயகர் சதுர்த்தி முதலில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சியில் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பீஷ்வாக்கள் சதுர்த்தியை கொண்டாடினர். சுதந்திரப் போராட்டத்திற்கு பிறகு இந்து மதத்தவர்களும் வணங்கத் தொடங்கினர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாலகங்காதர திலகர் ஆண்டாண்டு கொண்டாடும் வழக்கமாக மாற்றியுள்ளார். 

88872645420b3d09e8ef682474390f50-1

ஆவணி மாதம் அமாவாசையை அடுத்த சதுர்த்தியில் (சுக்ல பட்ச சதுர்த்தி) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தியை பெரிய கோவில்களிலும் செல்வமிக்கவர்கள் மட்டுமே கொண்டாடி வந்தனர். விநாயகர் எளிமையின் உருவம். பக்தர்களால் இயன்றதை பிராசதமாக ஏற்றுக்கொள்வார்.

அனைத்து தர மக்களுக்கும் அருள்பாலிக்கும் வகையில் குளக் கரையிலும் வீதிகளிலும் அமர்ந்திருப்பார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வசதியுடையவர்களும் ஏழை மக்களும் தகுதிக்கேற்ப உருவச் சிலைகளை கொண்டு வழிபட்டு வந்தனர்.

விநாயகர் சதுர்த்தி அன்று பல கோவில்களில் சிறப்பு வழிபாடு நடப்பது இன்றும் வழக்கமாக உள்ளது. 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.