விளையாட்டு
லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: குவிந்து வரும் பாராட்டு!
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 12ம் தேதி 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 364 ரன்கள் எடுத்தது என்பதும் இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 391 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி 298 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களான பும்ரா, சிராஜ், ஷமி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் மிக அபாரமாக பந்து வீசி இங்கிலாந்து கிரிக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் ஆட்டநாயகனாக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த 2014ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணின் வெற்றி பெற்றதை அடுத்து ஏழு வருடங்களுக்குப் பின் தற்போது அதே மைதானத்தில் மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வெற்றியின் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற கேப்டன் என்ற பட்டியலில் விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியில் 9 ஆவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்து பும்ரா மற்றும் ஷமி ஆகிய இருவரும் புதிய சாதனையை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
