என் வாழ்க்கையில் இவர் இருப்பது கடவுள் கொடுத்த வரம்… கலா மாஸ்டர் பகிர்வு…

கலா மாஸ்டர் எனப்படும் கலா தென்னிந்திய நடன இயக்குனர் ஆவார். இவர் பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக் போன்றவைகளை முறையாக கற்று தேர்ச்சி பெற்றவர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடனத்தின் மீதுள்ள ஆர்வத்தால் நடனத்தை கற்றுக் கொண்டார்.

1990 ஆம் ஆண்டு பாரதநாட்டியத்திற்காக கலாநிதி விருத்தைப் பெற்றார் கால. தனது மைத்துனரான நடன இயக்குனர் ரகுராமின் உதவியால் திரையுலகில் நுழைந்தார். இளம் வயதிலேயே உதவி நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் பணியாற்றியவர் கலா.

1989 ஆம் ஆண்டு ‘புது புது அர்த்தங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக பிரபலமானார் கலா. தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி, ஒரியா, பெங்காலி, ஆங்கிலம், இத்தாலியன், ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் 4000 திற்கும் மேற்பட்ட பாடல்களில் பணியாற்றியுள்ளார்.

2000 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நாட்டுப்புற நடன காட்சிகளை இயக்கியதற்காக சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றுள்ளார் கலா. இது தவிர சின்னத்திரையில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி புகழடைந்தார். விஜய் டிவியின் ‘ஜோடி நம்பர் ஒன்’, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியில் ஒன்று முதல் எட்டு வரை அணைத்து சீசன்களிலும் நடுவராக இருந்தவர்.

தற்போது, ஒரு நேர்காணலில் தனது குடும்பத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார் கலா மாஸ்டர். அவர் கணவரைப் பற்றி பெருமையாக பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், என் கணவர் மிகவும் அமைதியானவர், தலைக்கனம், ஈகோ இல்லாதவர். என் வீட்டிற்கு யாராவது நான் இல்லாத போது போன் பண்ணினால் நான் கலா மாஸ்டரின் கணவர் தான் பேசுகிறேன் என்று சொல்லுவார், என் வாழ்க்கையில் என் கணவர் இருப்பது கடவுள் கொடுத்த வரம் என்று கூறியுள்ளார் கலா மாஸ்டர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...