ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
குறிப்பாக இந்த வழக்கில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான முறையில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து பேரறிவாளனை விடுவிக்க மாநில அரசுக்கு உரிமை உள்ளதாக அன்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதனிடையே இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அமர்வில் இன்று காலை 10.30 மணிக்கு வந்தது. அப்போது பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தனது மகன் விடுதலையானது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் மனிதநேயமுள்ள அனைவருக்கும் நன்றி என அவருடைய தந்தை கூறினார்.
மேலும், பேரறிவாளன் திருமணம் குறித்து குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து முடிவெடுத்த பிறகு தான் ஆலோசிக்க முடியும் என கூறியுள்ளார். இருப்பினும் உண்மை நிலவரம் என்பது விரைவில் தெரியவரும்.