Connect with us

பெண் என்றும் பாராமல் திமுக சேர்மேனை வசைபாடிய இந்து அமைப்பினர்…. வைரல் வீடியோ!

DMK

செய்திகள்

பெண் என்றும் பாராமல் திமுக சேர்மேனை வசைபாடிய இந்து அமைப்பினர்…. வைரல் வீடியோ!

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் இந்துக்களைப் பற்றி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்துக்கள் மனம் புண்படும் படியாக பேசிய ஆ.ராசாவை கைது செய்யக்கோரி பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஆ.ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், சத்தியமங்கலம், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கடைகளை முழுமையாக அடைக்க வேண்டும் என இந்து அமைப்பினர் பிரச்சனையில் ஈடுபட்டு வந்தனர்.

நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திரு. ஆ. ராசா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினர் சத்தியமங்கலத்தில் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அதே சமயத்தில் நேற்று திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் சத்தியமங்கலம் நகரம் முழுவதும் கடைகளை திறக்க சொல்லி, துண்டறிக்கைகளை கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5.00 மணி அளவில் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பகுதியில் திறக்கப்பட்ட பேக்கரி ஒன்றை இந்து முன்னணியை சேர்ந்த குண்டர்கள் கற்களை வீசி பேக்கரியில் இருந்த கண்ணாடிகளை உடைத்து நாசப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து, சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திற்குச் சென்ற இந்து முன்னணியினர் அங்கு திறக்கப்பட்டு இருந்த கடைகளை அடைக்க சொல்லி ரகளையில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் தெரிந்து பேருந்து நிலையம் வந்த சத்தியமங்கலம் நகர மன்ற தலைவர் ஜானகி மற்றும் கூட்டணி கட்சியினர் எதற்காக கடைகளை அடைக்கச் சொல்கிறீர்கள் ? அது அவரவர் விருப்பமென தடுத்து நிறுத்தினார். பெண் என்றும் பாராமல் இந்து முன்னணியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது….

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top