சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை மாணவர்கள் அனைவரும் அடிப்படையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது குறித்து தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் புதிய கல்விக் கொள்கை முறை பற்றியும் அவர் பேசியுள்ளார்.
அதன்படி புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழி மட்டுமே கட்டாயம் ஆகும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். புதிய கல்விக் கொள்கையில் இந்தி உள்ளிட்ட மொழி, விருப்பப் பாடமாக மட்டுமே உள்ளன என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
இணைப்பு மொழி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப் பட்டுள்ளன என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னை திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.