ஹிந்தி தேசிய மொழி என்பது மூடநம்பிக்கை! ஒன்றிய அரசு புரியவையுங்கள்; கமல் வலியுறுத்தல்!!

நம் தமிழகத்தில் பல பகுதிகளில் இந்தி திணிப்பு போராட்டங்கள் காணப்பட்டன. பலரும் இந்தியை வன்மையாக எதிர்த்து போராடினர். இவ்வாறு இருக்கையில்  சில நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் பெரும் செய்தியாக காணப்பட்டது பிரபல உணவு பரிமாறும் நிறுவனம் ஹிந்தி மொழியை கற்க வேண்டும் என்று கூறியது.

கமல் ஹிந்தி தேசிய மொழி என்றும் கூறியிருந்தது. இதே போல பலரும் இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக கருதுகின்றனர். இதுகுறித்து தமிழகத்தில் பல்வேறு வன்மையான கருத்துக்கள் கிளம்பின.

அதன் வரிசையில் தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்ய தலைவரான கமலஹாசன் மத்திய அரசிடம் பல்வேறு வலியுறுத்திக் கூறியுள்ளார். இந்தியா பல மொழிகளின் நாடு, அரசியல் அமைப்பு சட்டப்படி நமக்கு  தேசிய மொழி என்று எதுவுமே கிடையாது என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

இவ்வாறு இருக்கையில் இந்தியை தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்து ஆட்டுகிறது என்றும் அவர் வன்மையாக கூறினார். தேசிய மொழி குறித்து தெளிவுபடுத்த வேண்டியது ஒன்றிய அரசின் மிக முக்கியமான கடமை என்று மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment