Connect with us

இந்தி தினம்! பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து..!!

modi amit shah

செய்திகள்

இந்தி தினம்! பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து..!!

நாடு முழுவதும் செப்டம்பர் 14- தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி என இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக மத்திய உள்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் அமித் ஷா, இந்தி மொழியானது ஒட்டுமொத்த தேசத்தையும் ஒருங்கிணைப்பதாக கூறியுள்ளார்.

அதே போல் பிரதமர் மோடி உலகம் முழுவதும் இந்தியாவிற்கு தனி சிறப்பை கொண்டுவருவதில் இந்தி மொழியானது முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதாகவும், அதன் எளிமை மற்றும் தன்னிச்சை அம்சமானது உணர்ச்சிகளை ஈர்ப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்தி தினத்தில் மொழியை செழுமையாக, அயராது பங்காற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top