Connect with us

ஹிஜாப் தீர்ப்பு: கர்நாடகாவில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

school closed2

செய்திகள்

ஹிஜாப் தீர்ப்பு: கர்நாடகாவில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

ஹிஜாப் தீர்ப்பு: கர்நாடகாவில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

இன்றைய தினம் கர்நாடகாவில் மிக முக்கியமான நாளாகக் காணப்படுகின்றது. பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று காணப்படுகிறது.

ஏனென்றால் இன்று கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பளிக்க உள்ளது. இதனால் பெங்களூருவில் போராட்டம், கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் பெங்களூரு மாநகரில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று ஹிஜாப் தீர்ப்பின் காரணமாக தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக ஹிஜாப் தீர்ப்பு காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிணா கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதால் தட்சிணா கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்ட நிர்வாகம் இத்தகைய உத்தரவினை பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top