கல்வி நிலையங்களில் ஹிஜாப்… உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு..!!!

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அம்மாநில அரசு தடை விதித்ததை எதிர்த்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடகா அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் பின்பற்றும் பழக்கம் அல்ல என கர்நாடக அரசு தெரிவித்தது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து 10 நாட்களாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் பின்பற்றும் பழக்கம் அல்ல என கர்நாடக அரசு தெரிவித்தது தவறானது என கூறப்பட்டது.

இதன் காரணமாக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிப்பதால் மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக அம்மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டனர்.

அதன் படி, நீதிபதி ஹேமந்த் குப்தா மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்கிறேன் என கூறினார். அதே நீதிபதி சுதான்ஷு துலியா கர்நாடக அரசின் அரசாணையை ரத்து செய்வதாக நீதிபதி தெரிவித்தார். இத்தகைய தீர்ப்பினால் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment