ஹிஜாப் சர்ச்சை: ’தடையில்லை’நீதிமன்றத்தில் அதிரடி முடிவு..
கர்நாடகாவில் உடுப்பி மகாத்மா காந்தி நினைவு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு சென்ற மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனை தொடர்ந்து தலித் மாணவர்கள் நீல நிற ஷால் அணிந்தும் இந்து மாணவர்கள் காவி அணிந்தும் போராட்டம் நடத்தியதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது சர்ச்சை எழுந்துள்ளது.
இதற்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்திற்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது என கர்நாடக நீதிமன்றம் மறுப்பை தெரிவித்துள்ளது.
மேலும், ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சனையை உயர்நீதிமன்றத்தின் விரிவான அமர்வு விசாரிக்கும் என நீதிபதி கிருஷ்ணா தீட்சித் தெரிவித்திருக்கிறார்.
