Connect with us

ஹிஜாப் விவகாரம்….; யாருக்கு சாதகமாக இருக்கும்? நாளை இடைக்கால உத்தரவு!!

hijab

செய்திகள்

ஹிஜாப் விவகாரம்….; யாருக்கு சாதகமாக இருக்கும்? நாளை இடைக்கால உத்தரவு!!

ஹிஜாப் விவகாரம்….; யாருக்கு சாதகமாக இருக்கும்? நாளை இடைக்கால உத்தரவு!!

பிப்ரவரி மாதம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.  இந்தியாவில் கொரானாவின் பாதிப்பு குறைந்தது. இதனால் ஒவ்வொரு மாநில அரசும் பள்ளி கல்லூரிகளுக்கு இயங்க அனுமதி அளித்திருந்தது.

அதிலும் குறிப்பாக பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே பெரும் மதப் பிரச்சினை உருவானது.

ஏனென்றால் இஸ்லாமிய பெண்கள் தங்கள் வழக்கம்போல் ஹிஜாப் அணிந்து விட்டு பாடசாலைக்கு சென்றனர். அவர்கள் ஹிஜாப் அணிய கூடாது என்று இந்து சமூகம் மாணவர்கள் தடுத்தனர்.

இதனால் அங்கு மாணவ-மாணவிகள் இடையே கலவரம் உண்டானது. எனவே அங்கு உயர்நிலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இது நிலையில் ஹிஜாப் வழக்கில் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஹிஜாப் தொடர்பான வழக்கில் நாளை இடைக்கால உத்தரவை பிறப்பித்து கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி நீதிபதிகள் காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அமர்வு உத்தரவு பிறப்பிக்க உள்ளனர். கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top