
செய்திகள்
உயர்கல்வி மாணவர் சேர்க்கை: யுஜிசி அதிரடி உத்தரவு!!
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் அதற்கு முன்னர் பல தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை முன்னதாகவே சேர்க்கையை தொடங்கி விடுவர்.
இந்நிலையில் நாடு முழுவதும் மே மாதம் நடந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விடைத்தாள் திருத்துவதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
தற்போது பல்வேறு மாநிலங்களில் உயர்கல்வி சேர்க்கை என்பது அந்தந்த கல்லூரிகளில் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு யுஜிசி ஒரு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
அதன் படி, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத இருக்கும் நிலையில் மாணவர் சேர்க்கை என்பது நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இத்தகைய அறிவிப்பானது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
