உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கு அவசரமாக கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதற்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப்படி உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கு ஒன்றிய அரசு அவசரமாக கலந்தாய்வு நடத்துவது நீதிமன்ற அவமதிப்பு என்று கி.வீரமணி கூறினார்.
உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்கள் இட ஒதுக்கீடு அளிக்காதது நீதிமன்ற அவமதிப்பு என்று அவர் கண்டனம் தெரிவித்தார். உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடப்பாண்டில் இருந்தே உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீட்டை வழங்குமாறு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் உள்ளது.
உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழக்கில் ஒன்றிய அரசு விளக்கம் தர உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். மேல்முறையீட்டு விசாரணையில் உள்ளதை பயன்படுத்தி அவசர அவசரமாக இட ஒதுக்கீடு இன்றி கலந்தாய்வு நடத்த முயற்சி செய்வதாக கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய சுகாதார சேவை தலைமை இயக்குனரகம், 100% இடங்களுக்கும் தானே கலந்தாய்வு நடத்த ஆணை பிறப்பித்துள்ளது. ஒன்றிய சுகாதார சேவை தலைமை இயக்குனரகத்தின் செயல் பொதுசுகாதார அமைப்புக்கு எதிரான சமூக நீதி என்றும் வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தகுதி, திறமை என்ற மாய பிம்பத்தை வைத்து அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் மறுக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுக்கும் முடிவை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் கி. வீரமணி கூறினார்.
உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் அரசு மருத்துவருக்கான இட ஒதுக்கீட்டை உடனே வழங்க என்று வீரமணி வலியுறுத்தியுள்ளார். அந்தந்த மாநிலத்துக்கான ஒதுக்கீட்டையும் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த கோரிக்கை வைத்துள்ளார்.
உயர் சிறப்பு மருத்துவ படிப்பு கலந்தாய்வு பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தியது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு என்று வீரமணி கூறினார். உயர் சிறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவசரமாக கவனம் செலுத்த கி வீரமணி கோரிக்கை வைத்துள்ளார்.