ஸ்ரீமதியின் மரணம் குறித்து உயர்நீதிமன்றம் கருத்து… பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து சிபி சிஐடி போலீசார் பள்ளியில் பதிவாகி இருந்த அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தொடர்ந்து பல கோணங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்

இந்த சூழலில் நேற்றைய தினத்தில் மாணவி ஸ்ரீமதி கொலையோ, பாலியல் வன்கொடுமையோ செய்யப்பட்ட வில்லை என்றும் மாணவி தற்கொலை செய்துகொண்டார் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது பெற்றோர்கள் மத்தியில் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

அதோடு மாணவி தரப்பில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரையில் செல்ல தயாராக இருப்பதாகவும் ஸ்ரீமதியின் தரப்பில் தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டது.

குறிப்பாக ஜாமின் வழக்கு விசாரணையில் ஸ்ரீமதியின் மரணம் குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.