பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி !!
சமூகவலைதளங்களில் ஒன்றான யூடி யூப்பில் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற சேனல்களில் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் கேம்களில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக சர்ச்சையில் சிக்கியவர் பப்ஜி மதன்.
இவருக்கு பொதுமக்கள் மற்றும் சமூல ஆர்வலர்கள் இடத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் காவல் நிலையத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் புகார்கள் அளித்தனர். இதனை அறிந்த பப்ஜி மதன் திடீரென தலைமறைவானார்.
பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் ஜூன் 18 ஆம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் இவர்மேல் ஏராளமான புகார்கள் வந்ததால் இவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் தனது செயல்பாடுகள் மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கை பாதிக்கவில்லை என்றும் பப்ஜி விளையாடுவது பொதுஅமைதியை பாதிக்காது என தெரிவிக்கப்பட்டது.
தற்போது இந்த மனுவின் விசாரணை இன்று அமர்வுக்கு வந்தது. அப்போது பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து மற்ற வழக்குகள் தொடர்பாக விசாரணை நடைபெறும் என தீர்ப்பளித்தனர்.
