வளர்ந்து வரும் நவீன காலக்கத்திற்கு மத்தியில் உலகம் முழுவதும் பெண்ணின் கருவை கலைப்பதற்கான உரிமையானது பேசும் பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த 26 வயதான பெண் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். அதில் தன்னுடைய குழந்தைக்கு வயிற்றில் இருக்கும் போது பெருமூளைக் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!!
இதன் காரணமாக குழந்தையின் கருவை கலைக்க மருத்துவ மனைக்கு சென்றபோது கருவை கலைக்க மருத்துவமனை அனுமதி மறுத்துவிட்டதாக மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில் தற்போது வயிற்றில் 33 வாரமாக சிசு வளர்வதாகவும், கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கின் விசாரணை அமர்வானது இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதிபா சிங் முன் விசாரணைக்கு வந்தது.
ஜார்க்கண்டில் பயங்கரம்! உறவினர் தலையுடன் செல்ஃபி எடுத்த இளைஞர்..!!
அப்போது பேசிய நீதிபதி “ஒரு பெண்ணின் இத்தகைய முடிவை அங்கீகரிக்கும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது” என்ற கருத்தினை தெரிவித்தார். பின்னர் சிசுவை கலைப்பது தாய் எடுக்கும் முடிவை பொறுத்தது என கூறி நீதிமன்றம் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.