பத்திரப்பதிவு பற்றி தமிழக அரசுக்கு அட்வைஸ் பண்ணும் ஹைகோர்ட்!

தமிழகத்தின் சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும்.  அவ்வப்போது தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை கூறிவரும்.உயர்நீதிமன்றம்

அதன்படி பத்திரப்பதிவுத்துறை நடைமுறை தொடர்பாக தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பத்திரப்பதிவை ரத்து செய்யும் விண்ணப்பம் மீது பதிவாளர் பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று ஹைகோர்ட் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்தத் தீர்ப்பாயத்தில்  ஓய்வுபெற்ற நீதிபதி தலைவராகவும் நியமிக்க அறிவுறுத்தல் செய்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பதிவு துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை தீர்ப்பாய உறுப்பினராக நியமிக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சிவில் நீதிமன்றமாக கருதப்படும் இந்த தீர்ப்பாயத்தில் முடிவே இறுதியானது என கருத வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

பத்திர பதிவுகளை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.  மின்மயமாக்கல் வந்ததன் மூலம் போலி ஆவணங்கள் பதிவு செய்ய முடியாத வகையில் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்றும் பதிவு துறை தலைவர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment