வன விலங்குகள் கடக்கும் இடங்களில் உயர்மட்ட பாலம்; மலைப்பகுதிகளில் சென்சார் ஹாரன்!: அமைச்சர் வேலு;

மலை, வன பகுதிகளில் உள்ள சாலைகளில் அடிக்கடி வனவிலங்குகள் சுற்றித்திரியும். ஒரு சில நேரங்களில் வன விலங்குகளால் மனிதர்களுக்கும், மனிதர்களால் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

இதனை தடுக்கும் வகையில் வனவிலங்குகள் கடக்கும் இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் வேலு கூறியுள்ளார். அதன்படி நெடுஞ்சாலைகளில் வன விலங்குகள் அடிக்கடி கடந்து செல்லும் இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறியுள்ளார்.

உதகையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு பேட்டியளித்தார். சாலை விபத்துகளில் சிக்கி போராடுவோர் உயிரைக் காக்க முதல் 48 மணி நேரத்துக்கான மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்று சில தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டது.

இன்னுயிர் காக்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த மூன்று நாட்களில் இதுவரை 26 லட்சம் அரசு வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். மலைப்பகுதிகளில் வாகன விபத்தை தடுக்க வளைவுகளில் சென்சார் ஹாரன் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் வேலு கூறினார்.

பர்லியாறு மலைப் பாதையில் சென்சார் ஹாரன் அமைக்கப்பட்டு தற்போது சோதனை நடக்கிறது என்றும் அமைச்சர் வேலு கூறினார். சோதனை வெற்றி பெற்றால் நீலகிரி கொடைக்கானல், ஏற்காடு, போடிமெட்டு சாலைகளில் சென்சார் ஹாரன் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் வேலு கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் செல்லும் இடங்களில் மேம்பாலம் அமைக்க விரைவில் ஆய்வறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் வேலு கூறினார். உதகை சேரிங்கிராஸ் பகுதியில் மேம்பாலம், குன்னூரில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் வீடு கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment