ஹெத்தையம்மன் திருவிழா… பாரம்பரிய உடையில் சாய் பல்லவி பங்கேற்பு!!

நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழாவிற்கு நடியை சாய்பல்லவி பாரம்பறிய உடையில் வந்து பங்கேற்றது அனைவரையும் கவர்ந்துள்ளது.

Fl3hYtEaYAAtgEE

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் படுகா இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை ஹெத்தையம்மன் திருவிழா நடைப்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

Fl3hZCVaUAITtRt

அந்த வகையில் நேற்று முன் தினம் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலமாக நடைப்பெற்றது. இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து மக்கள் பங்கேற்று வருகின்றனர்.

Fl3hZq6aMAEtGGz

இந்நிலையில் முன்னணி நடிகை சாய்பல்லவி பாரம்பரிய வெண்ணிற உடை அணிந்து விழாவில் பங்கேற்றார். இதனை பார்த்த ஹெத்தையம்மன் பக்தர்கள் ஆச்சரியத்தில் மூழ்கிபோய் உள்ளனர்.

Fl3hZWTaAAE3BMD

இது குறித்த புகைப்படங்கள் சமூல வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  நடிகை சாய்பல்லவி பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கின்றனர்.

sai

சமீபத்தில் நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவான கார்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.