
பொழுதுபோக்கு
ராத்திரி எங்கேயாவது போனியா? பிரியா பவானி சங்கரை பார்த்து கேட்ட நபர்!
பிரியா பவானி சங்கர் கோலிவுட்டில் வேகமா வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். செய்தி வாசிப்பாளராக தனது பணியை ஆரம்பித்து, சின்னத்திரை தொடரின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் பிரியா பவானி ஷங்கர். அதனை தொடர்ந்து பட வாய்ப்பு கிடைத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளும் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் பல ரசிகர்களை பெற்றார், பின்னர் 2017ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார், இதில் வைபவ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற பல படங்களில் கமிட்டானார்.
இவர் கடைசியாக அருண் விஜய்வுடன் இணைந்து யானை திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர் ருத்ரன்,திருச்சிற்றம்பலம்,குருதி ஆட்டம் ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து மிகவும் பிசியாக நடித்து வருகிறார். மேலும் அகிலன் மற்றும் பத்து தல ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.இத்திரைப்படம் விரைவில் ரிலீஸ்சாக இருக்கிறது.
பிரியா பவானி சங்கர் தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாட மறப்பதில்லை. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது தனது நேரங்களை ரசிகர்களுக்கு ஒதுக்குவது வழக்கம். அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாவில் பதில் சொல்லி வருகிறார். சமீபத்தில் அவரிடம் உள்ளாடை பற்றி ஆபாச கேள்வி கேட்ட ஒரு நபருக்கு பதிலடி கொடுத்து இருந்ததும் இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பிரபலம் ஒருவர் இரவு எங்காவது போறியா? என தவறாக கேட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதை இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது ரேகா, தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து வரும் பிரியா பவானி சங்கரை பார்த்து சின்னத்திரையில் நடிக்கும் போது ஒருவர் நைட் எங்கேயாவது போறியா என கேட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சரத் குமாரின் நாட்டாமை படத்தில் நடிக்க வேண்டியது யார் தெரியுமா?
