
பொழுதுபோக்கு
மாநாடு படத்தின் வாய்ப்பை இழந்த ஒரே குடும்பத்தை சார்ந்த ஹீரோக்கள்! யாரு அந்த ஹரோக்கள்?
வெங்கட் பிரபு இயக்கத்தில் வி அவுஸ் புரொடக்சன்சின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான படம் ‘மாநாடு’. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் என பல முக்கிய நடிகர்கள் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளனர் .
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின் நவ.25-ம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சாதனை படைத்தது. சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக வேறெந்த படமும் வராமல் இருந்த நிலையில் மாநாடு ரிலீஸ் ஆகி ரூ.100 கோடி வசூலை பெற்றது.
தற்போது இந்தப் படம், 117 கோடி ரூபாய் வசூல் பெற்றுள்ளதாக படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி டிவிட்டரில் அறிவித்துள்ளார்.”இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாநாடு படம் அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
முதல் முதலில் வெங்கட் பிரபு இந்த கதையை நடிகர் சூர்யா அவர்களிடம் தான் கூறியிருந்திருக்கிறார்,ஆனால் சூர்யா இந்த கதையை நடிக்க மறுத்துள்ளார்,அதன்பின் தான் அவர் தேர்ந்தெடுத்து நடித்த படம் மாசு என்கிற மாசிலாமணி.
அதை தொடர்ந்து வெங்கட் பிரபு கதையை நடிகர் கார்த்தியிடம் கூறியுள்ளார்,ஆனால் கார்த்தி இந்த படத்தில் நடித்தால் தனது திரை வாழ்க்கைக்கு பாதிப்பு வந்துவிடுமோ என பயந்து மறுத்துள்ளார்.அதன்பின் தான் அவர் தேர்ந்தெடுத்து நடித்த படம் பிரியாணி.
குடும்ப குத்துவிளக்காக சேலை அணிந்த பூஜா ஹெக்டே! அணிந்த சேலையின் விலை தெரியுமா?
