Entertainment
ஹீரோவாகும் சரவணா ஸ்டோர் அதிபர்
சென்னை சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் ஆரம்பத்தில் சூர்யா போன்றோர் நடித்து கொண்டிருந்தனர். அதன் அதிபரான சரவணன் சில வருடங்களுக்கு முன் ஹீரோக்கள் நடிக்கும் இடத்தில் நாமே நடித்தால் என்ன என்ற அடிப்படையில் அவரே விளம்பரங்களில் நடித்தார். அதுவும் விளம்பரங்களில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா போன்றோர் நடித்தது பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

சமூக வலைதளங்களில் இவரை பற்றி அதிகமான விமர்சனம் எழுந்தது.எதற்காக இவர்லாம் விளம்பரத்துல நடிக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தது. அதை எல்லாம் மீறி இவர் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்தார். விமர்சனங்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
இப்போது இவர் விளம்பரத்தில் நடிக்க பழகி விட்ட நிலையில், சினிமாவிலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக கதை கேட்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அவருக்கு பிடிக்கும் கதையில் நடிக்க 2020-ம் ஆண்டு முடிவு செய்துள்ளார். ஆனால், தற்போதே இதன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
