Connect with us

ராவணன் படத்தின் வீரா கதாபாத்திரம் ரொம்ப பிடிக்கும்… நடிகர் விக்ரம் நெகிழ்ச்சி!!

vikram

பொழுதுபோக்கு

ராவணன் படத்தின் வீரா கதாபாத்திரம் ரொம்ப பிடிக்கும்… நடிகர் விக்ரம் நெகிழ்ச்சி!!

தமிழகத்தில் கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டுவரையில் தமிழ் நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட விருதுகள் குறித்து அப்டேட் அறிவிக்கப்படாமல் இருந்தது.

நடப்பாண்டில்  திரைப்பட விருதுகள் குறித்து  தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினத்தில் சென்னை கலைவாணர் அரங்கில், ‘திரைப்பட மற்றும் சின்னத்திரை விருது’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் விக்ரம் ராவணன் படத்திற்காக பெற்றார்.

குறிப்பாக கடந்த 2010-ம் ஆண்டு விக்ரம்-ஐஸ்வர்யா ராய் நடிப்பில், மலைவாழ்பகுதி மக்களின் உரிமைகளுக்காக வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்துப் போராடும் கதையாக உருவான ராவணன் படம் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் விக்ரம் ராவணன் படத்திற்காக விருதை பெற்ற பிறகு பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர் ராவணன் படத்தின் வீரா என்ற கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறினார்.

அதே போல், இத்தகைய தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனர் மணிரத்தனம் அவர்களுக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top