இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் இதோ…

நவவீனமயமாக்க பட்ட இந்த உலகத்தில் மக்களின் மனதும் நவீனமாக மாறிவிட்டது. திரையரங்ககளில் சென்று படங்களை பார்த்தலும் கூட ஓடிடியில் படம் எப்போது வெளியாகும் என்று காத்திருப்பவர்கள் பலர். தனிமை விரும்பிகள் ஓடிடியில் ரிலீசாகும் புது படங்களை வீட்டில் தனிமையில் விருப்பமான தின்பண்டங்களை கையில் வைத்துக் கொண்டு கண்டு களிப்பர்.

கொரோனா பரவிய காலகட்டத்தின் போது போடப்பட்ட லாக்டௌன், மக்களை வீட்டிற்குள் முடக்கி பொழுதுபோக்கிற்கு வழியில்லாமல் செய்தது. அப்போது வந்ததுதான் ஓடிடி கலாச்சாரம். லாக்டௌன் சமயத்தில் உருவாக்கப்பட்ட ஓடிடி தளங்கள் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. அதன் பின்பு ஓடிடி தளங்களுக்கு அமோக வளர்ச்சி தான். அமேசான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ், ஆஹா, டிஸ்னி+ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ 5 போன்ற ஓடிடி தளங்கள் படங்களை வாங்குவதற்காக போட்டி போட்டு கொண்டு விலையை நிர்ணயித்தன.

பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் பெரிய ஹீரோக்களின் படங்களை தவிர சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாக ஆரம்பித்தன. பெரிய ஹீரோக்களின் படங்களும் திரையரங்கில் வெளியிட்ட குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு மக்களுக்கு தோன்றும் நேரமெல்லாம் பார்ப்பதற்கு வசதியாக ஓடிடியில் வெளியாகிறது. அதன்படி இந்த வரம் ஓடிடியில் வெளியாக போகும் படங்களின் பட்டியலை காணலாம்.

ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த ‘லால் சலாம்’ நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வருகிற மார்ச் 8 ஆம் தேதி வெளியாகிறது. மணிகண்டன் நடித்த ‘லவ்வர்’ திரைப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திலும், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்திலும், ஹீமா குரேஷி நடித்துள்ள மஹாராணி சீசன் 3 தொடர் சோனி லிவ்விலும், தேஜா, அம்ரிதா ஐயர், வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த ஹனுமான் திரைப்படம் ஜீ 5 தளத்திலும் வருகிற மார்ச் 8 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படங்கள் தான் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. ஓடிடியில் தான் படம் பார்ப்பது என்ற கொள்கையுடன் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரம் தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.