Connect with us

“அடுத்த நான்கு நாட்களுக்கு” எந்தெந்த மாவட்டங்களில் மழை? பட்டியல் இதோ!

News

“அடுத்த நான்கு நாட்களுக்கு” எந்தெந்த மாவட்டங்களில் மழை? பட்டியல் இதோ!

b03d6ec2ef36067b27eb63ba35221b40-1

தற்போது நம் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியது என்றே கூறலாம். தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே வருகிறது. மேலும் வானிலை மையமும் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறிக் கொண்டே வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என்ற பட்டியலையும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.0ab568acce8979cbc0d11d3eab649c1c

அதன்படி செப்டம்பர் 21ம் தேதியில் வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் ,ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. செப்டம்பர் 22-ஆம் தேதி தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

செப்டம்பர் 23ஆம் தேதி சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது, செப்டம்பர் 24ம் தேதியில் சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top