
News
அடிதூள்… இனி இரவு நேர ரோந்துக்கு செல்லும் காவலர்களுக்கு ஊக்கத்தொகை!
இரவுப் பணிக்கு செல்லும் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இரவுநேர ரோந்துப் பணிக்கு செல்லும் அனைத்து காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மாதம் ரூபாய் 300 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
காவலர்களுக்கு வாரம் விடுமுறை அளிக்கப் படுவது போன்று உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் களுக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை விடுமுறை அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இணையவழி சூதாட்டத்தில் பங்கேற்று தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு நபர்களின் காரணங்களை அறியும் பொருட்டு மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும்.
