Connect with us

பாஜகவை தோற்கடித்த ஹேமந்த் சோரன்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!!

Capture 10

செய்திகள்

பாஜகவை தோற்கடித்த ஹேமந்த் சோரன்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!!

ஜார்க்கண்ட் சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெற்றியடைந்துள்ளதாக  கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ஜார்க்ண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வந்தது. குறிப்பாக அம்மாநில முதல்வ ஹேமந்த் சோரன் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு வழக்கில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறியதாக கூறப்படுகிறது இதன் காரணமாக அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி அனைத்து கட்சியினரும் வலியிறுத்தி வந்தனர்.

அதன் படி, சில தினங்களுக்கு முன் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்-ஐ தகுதி நீக்கம் செய்ய அம்மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இதன் பேரில் இன்றைய தினத்தில் ஜார்க்கண்ட சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடு நடைப்பெற்றது.

அப்போது ஹேமந்த் சோரனுக்கு ஆதரவாக 48 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில் ஹேமந்த சோரன் அபார வெற்றி பெற்றார். மேலும், சட்டபேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top