Connect with us

இலங்கையை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு உதவி.!! இந்தியாவின் மாஸ்டர் பிளான் என்ன?

india help

செய்திகள்

இலங்கையை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு உதவி.!! இந்தியாவின் மாஸ்டர் பிளான் என்ன?

சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் முழுவதுமாக கைப்பற்றினர். இதன் விளைவாக தற்போது வரை தாலிபன்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும் ஊடகங்கள் வாயிலில் செய்திகள் கிடைத்துக் கொண்டே வருகின்றன.

இதன் மத்தியில் தாலிபன் அமைப்பினருடன் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் கசிந்தது. அதன்படி ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தாலிபான் அமைப்பினருடன் இந்திய அதிகாரிகள் முதல் முறையாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் ஜே.பி.சிங் தலைமையிலான குழு தலிபான்களுடன் பேச்சு நடத்த காபூல் சென்றுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் குறித்து விவாதிக்கின்றனர் இந்திய அதிகாரிகள்.

ஆப்கானிஸ்தானுக்கு 20,000 கோதுமை, 13 டன் மருத்துவ பொருட்கள், 5 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பியுள்ளது. குளிர்கால ஆடைகளை உள்ளிட்ட பொருட்களையும் ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அரசு அனுப்பியுள்ளது.

ஐநா அமைப்புகள் வாயிலாக ஆப்கானிஸ்தானில் இந்தியா உதவிப் பொருட்கள் விநியோகம் செய்ய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய உதவிப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதை கண்காணிக்கும் பணியில் இந்திய அதிகாரிகள் குழு ஈடுபடும் என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இன்னும் என்னவெல்லாம் உதவிகள் வேண்டும் என அதிகாரிகள் குழு கண்டறியும். மேலும் உதவிப் பொருட்கள் உள்ளிட்டவை ஆப்கானிஸ்தானுக்கு விநியோகிக்கப்படும் என்று இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top