நம் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு பலரும் உதவி கொண்டு வருகின்றனர். காரணம் என்னவென்றால் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் மழை நீருக்குள் மூழ்கி உள்ளது.
இதனால் தன்னார்வலர்கள், அரசு, அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டே வருகின்றனர். இந்த நிலையில் தேசிய கட்சியின் முக்கிய தலைவர் தனது கட்சி உறுப்பினர்களுக்கு சென்னைக்கு உதவிட வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி சென்னை மக்களுக்கு காங்கிரஸார் உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.நம் இந்தியாவில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு படிப்படியாக பல மாநிலங்களில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் விளைவாக நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியாக வெற்றி பெற்றது.இதனால் சந்தோஷத்தில் இருந்தார் ராகுல் காந்தி.
இந்நிலையில் சென்னையில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவது எனக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.